Thursday, September 30, 2010

நின் புன்னகையினில்....!

ஆதவனே ! நின்முகம் செங்கமலமாய்

ஆயிரங் கதிர்களுடனே ஒளிவீசிடுமே !

முழுமதியே ! நின்முகம் மங்கலமாய்

மஞ்ச ளழகியாய் பளீச்சிடுமே !

கருமேகமே ! நின்முகம் ஆனந்தமாய்

வான்வெளி யெங்கும் சூழ்ந்திடுமே !

இடியே ! நின்முகம் மத்தளமாய்

எட்டுத்திக்கும் டமாரமாய் முழங்கிடுமே !

மின்னலே ! நின்முகம் ஜோதியாய்

கண்களிடையே மின்னொளியாய் பிரகாசித்திடுமே !

மழையே ! நின்முகம் பகட்டாய்

பார்முழுதும் முத்துச்சாரலாய் பொழிந்திடுமே !

தென்றலே ! நின்முகம் வசந்தமாய்

வனங்கள்தோறும் வானளாவிப் பெருகிடுமே !

மலையே !நின்முகம் பாங்காய்

ஈரேழுலோகங்களையும் மிஞ்சிட உயர்ந்திடுமே !

ஆகாயத்தந்தையவன் மடியில் தவழும்

நிலமகளாம் பூமகளின் புன்னகையினால் .!!!

No comments:

Post a Comment