Sunday, September 12, 2010

எங்கிருந்தாய்?

இனியவனே !

நீலாம்பரி ராகந்தனில்

உன் தேனிசை ஒலித்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

தெவிட்டா தமுதமாய்

உன் செம்மொழி சுவைத்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

பளிச்சிடும் நீரதனில்

உன் கட்டழகு பார்த்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். !

வருடிடும் தென்றலதனில்

உன் பொன்மேனி சிலிர்த்திடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

கெஞ்சிடும் இமைகளதில்

உன் செவ்விதழ் கொஞ்சிடவே

இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் !

காத்திருந்த காலம் போதுமென்று

வந்தாயே வசந்தமாய் அருகில்இன்று !

எனதுயிர்ப் பைங்கிளியே

இந்த இன்பமென்றும் திளைத்திடவே

எத்துணை துன்பமும்நான் பொறுத்திருப்பேன்

இத்துணை நாளாய்நீ எங்கிருந்தாய் ?

No comments:

Post a Comment