கண்ணே!
நிலவைப் பார்த்து
உன் முகத்தைக்
கண்டு கொண்டேன்!
வானைப் பார்த்து
உன் பரந்த மனத்தைக்
கண்டு கொண்டேன்!
சூரியனைப் பார்த்து
உன் உள்ளத்தைக்
கண்டு கொண்டேன்!
தென்றலைப் பார்த்து
உன் சுவாசத்தைக்
கண்டு கொண்டேன்!
நட்சத்திரங்களைப் பார்த்து
உன் புன்னகையைக்
கண்டு கொண்டேன்!
உன் கொஞ்சும் விழிகளைப் பார்த்து
உன் விருப்பத்தைக்
கண்டு கொண்டேன்!
உன் மௌனத்தைப் பார்த்து
உன் சம்மதத்தைக்
கண்டு கொண்டேன்!
என் இதயத்தைத் தொட்டுப் பார்த்து
படக்...படக்...படக்..என
உன் இதயம்துடிப்பதைக்
கண்டு கொண்டேன்!
Sunday, September 12, 2010
படக்…படக்…படக்…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment