Monday, October 4, 2010

மகாத்மா...!

குஜராத்திலே உதித்த முத்தல்லவோ

போர்ப்பந்தரிலே தோன்றிய பொன்னல்லவோ

இந்தியாவுக்கே வந்த இமயமன்றோ

அகிம்சையே அவன் வழியன்றோ ! [குஜராத்திலே]

கருணைமழை பொழிந்த வான்முகிலே

சாந்தஉள்ளம் கொண்ட சாத்வீகமே

மாந்தருக்குள் தோன்றிய மாமணியே

மாநிலத்தின் மொத்த அற்புதமே…! [குஜராத்திலே]

நல்வினை பொருந்திய நாயகமே

நடுநிலை பொதிந்தத் தாயகமே

கல்விச்செல்வம் தந்த நல்லறிவே

கவிதையே உந்தன் கற்பகத்தருவே….! [குஜராத்திலே]

சோம்பலை விடுத்தச் சித்திரமே

சத்தியத்தைக் கையாண்ட சாத்திரமே

செல்வமெல்லாம் சேர்ந்தப் பொக்கிஷமே

சொன்னசொல்லைக் காத்தக் காந்தியமே…! [குஜராத்திலே]

ஏழைகளின் துயர்துடைத்த எளியவனே

ஊழியருக்கு ஊழியனான உன்னதமே

கலையுள்ளம் கொண்டக் காவியமே

கொலைசெயல் மறுத்த மாதவமே…! [குஜராத்திலே]

தக்கசமயம் தந்துதவிய தைரியமே

மரணபயம் போக்கிய மந்திரமே

புண்படுத்தாத உள்ளம் கொண்டவனே

புண்ணியமே செய்த நல்லுணர்வே…….! [குஜராத்திலே]

தலைசிறந்த தலைவனானத் தங்கமே

உலகமெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்த உத்தமனே

பாரதம் பெற்றக் கலைமகனே

மகாத்மாவே எங்கள் தேசத்தந்தையே….! [குஜராத்திலே]