புத்தாண்டே...!புதுவரவே...!
தாய்சொல் தட்டிடாமல்
தந்தைசொல் மீறிடாமல்
பெற்றவர்களுக்கோர் பாரமில்லாமல்
விரும்பி மணந்தவனுடன்
ஊரறிய சுற்றம்சூழ
மனமொத்த தம்பதியராய்
மகிழ்ச்சியுடன் இருக்கையிலே!
இருமனம் கலந்து
இல்லறசுகம் பெற்றபோதும்
அம்மாவென் றழைத்திடவே
குழவியெதுவும் இல்லாதநிலையில்
பிள்ளச்சோகம் மறக்கயெண்ணி
ஜவுளிக்கடைப் படியேறி
கணினிப்பெட்டியில் பில்லடித்து
பொழுதைப்போக்கிய வேளையிலே!
மாமன்மாமி மச்சினிச்சியும்
நாத்தனார்நாத்திக் கொடுமையிலும்
பிள்ளைச்செல்வம் இல்லையென
வெள்ளைமன மறியாதோர்
சொல்லும்சுடும் வார்த்தையையும்
சிரித்துப்பேசி மறந்துமே
யாருரைத்த போழ்திலும்
மனசொடிந்து போகாது
அனுசரித்துப் போகையிலே!
தாலிகட்டி மணமுடித்த
மணாளனவன் மலடியென
கூறும்துயர நேரத்திலே!
ஏன்பிறந்தோ மென்றெண்ணி
இதயமொடிந்து போனாளே!
புத்தாண்டு பிறந்தவுடன்
புதுமனிதன் தோன்றிடுவான்!
பிறக்கும்குழவியின் குரல்கேட்டு
கட்டியகணவனும் மகிழ்ந்திடுவான்
திட்டியஉறவுகளும் திருந்திடுமே
என்றேயெண்ணி என்தோழியும்...
காத்திருக்கும் புத்தாண்டே! புதுவரவே...!
Sunday, December 26, 2010
நன்றிகள்!
தோழனின்
அன்புக்கரங்கள்
மீட்டிய
வீணையில்
மரபுப்பாக்கள்
இயல்புடன்
உதிர்ந்த
பொழுதினில்
பாசமலர்கள்
சரத்துடன்
பூத்த
நேரத்தினில்
இதயஅறைகள்
துடிப்புடன்
இசைத்த
அசைவினில்
ஒருதுளி
நட்புக்கென
ஒதுக்கி
மகிழ்ந்ததில்
மாணிக்கப்பரல்களுக்கு
ஓர் மகுடமாய்
ஜொலிக்கும்
உன்மனதில்
இந்த ஏழைக்கோர்
சிறுஇடம்
ஓரமாய்
ஒன்று
கிடைத்ததில்
படைத்த
கடவுளுக்கோர்
ஆயிரங்கோடி
நன்றிகளே...!
அன்புக்கரங்கள்
மீட்டிய
வீணையில்
மரபுப்பாக்கள்
இயல்புடன்
உதிர்ந்த
பொழுதினில்
பாசமலர்கள்
சரத்துடன்
பூத்த
நேரத்தினில்
இதயஅறைகள்
துடிப்புடன்
இசைத்த
அசைவினில்
ஒருதுளி
நட்புக்கென
ஒதுக்கி
மகிழ்ந்ததில்
மாணிக்கப்பரல்களுக்கு
ஓர் மகுடமாய்
ஜொலிக்கும்
உன்மனதில்
இந்த ஏழைக்கோர்
சிறுஇடம்
ஓரமாய்
ஒன்று
கிடைத்ததில்
படைத்த
கடவுளுக்கோர்
ஆயிரங்கோடி
நன்றிகளே...!
Friday, December 24, 2010
புத்தாண்டே ...!புதுவரவே..!
கடைக்கண் பார்வையில்
இகபரசுகம் தாங்கி
வல்லமை மிகுதியுடன்
அபயமளிக்கும் ஆதிலட்சுமியவள்
அபயமென்று வருவோர்க்கு
அபயமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
ஜடா மகுடத்துடன்
சுகுமாறனை ஏந்தி
பூரண கும்பத்துடன்
சௌபாக்கியமளிக்கும் சந்தானலட்சுமியவள்
சகலசௌகர்யமும்வேண்டி வருவோர்க்கு
சௌபாக்கியமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
கரங்கள் நான்கினில்
ஞானமுத்திரை தாங்கி
வெண்பட்டுப் புடைவையுடன்
அரசபோகமளிக்கும் கஜலக்ஷ்மியவள்
அரசபோகம்நாடி வருவோர்க்கு
யோகம்பலவுமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
எண் கரங்களில்
சங்குசக்கரம் தாங்கி
தங்க மணிமகுடத்துடன்
வேண்டும்வரமளிக்கும் தனலக்ஷ்மியவள்
பொருள்வேண்டி வருவோர்க்கு
வேண்டும்வரமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
எண் கரங்களில்
சூலம்கபாலம் ஏந்தி
எட்டுக்கைகளிலும் வெற்றியுடன்
நிர்க்கதியைப்போக்கும் வீரலக்ஷ்மியவள்
நற்கதிவேண்டி வருவோர்க்கு
வேண்டும்நலங்களளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..
இடக் கரத்தினில்
செழுங்கரும்பை ஏந்தி
ஆற்றோர எழிலழகுடன்
நிலவளமளிக்கும் தான்யலக்ஷ்மியவள்
நிலவளம்வேண்டி வருவோர்க்கு
வேண்டும்வளமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
அழகிய முகந்தன்னில்
தாய்ப்பாசந்தனை ஏந்தி
இராஜலங்கார வடிவுடன்
துயரம்போக்கும் விஜயலக்ஷ்மியவள்
இன்பம்வேண்டி வருவோர்க்கு
வேண்டுமின்பமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
நான்கு கரங்களில்
அழகியமலர் தாங்கி
கண்கவர் பொன்மேனியுடன்
வறுமைபோக்கும் மகாலக்ஷ்மியவள்
அறம்பொருள்வீடுபேறுவேண்டி வருவோர்க்கு
வேண்டும்வீடுபேறளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!
!
மூவுலகைல் இருப்போர்க்கும்
சந்ததியுடன் தனம்கொடுத்து
கலைகளில்வெற்றி தந்து
சகலசௌபாக்கியமும் வீரத்துடனருளி
அக்ஷ்டலக்ஷ்மியாம் உன்னாமம்சொல்வோர்க்கு
மோட்சத்துடன் முக்தியளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே...நீ புதுவரவே...!
Sunday, December 5, 2010
வருகவே…!…
இனிய பாடல்களைப்
பாடிச் செல்லும்
பறவைகளின் ஒலிகளுக்கிடையே!
சுகமான தென்றலை
வீசிச் செல்லும்
காற்றின் அசைவுகளுக்கிடையே!
கரிய நிறத்தினை
விட்டுச் செல்லும்
மேகங்களின் அரவணைப்புகளுக்கிடையே!
சுகந்த மணத்தைப்
பரப்பிச் செல்லும்
பூஞ்சோலைகளின் புன்முறுவல்களுக்கிடையே!
உன்னதமான அமைதியை
நாடிச் செல்லும்
அலைகளின் ஆர்ப்பாட்டங்களுக்கிடையே!
ஆனந்தமான இசையை
ஊடுருவிச் செல்லும்
மழையின் நீர்த்துளிகளுக்கிடையே!
ஒற்றை ரோஜாவாய்
வர்ண ஜாலங்களுடன்
விண்ணின் உயரத்தை
அளந்துசெல்ல வந்திருக்கும்
எனதருமை வானவில்லே வருகவே..!
Subscribe to:
Posts (Atom)