Thursday, February 11, 2010

சிந்தனைக்கு

அளவான செருப்பு
காலைக் கடிக்கும்.
அளவற்ற செலவு
கையைக் கடிக்கும்.

அளவான பேச்சு
அறிவைப் பெருக்கும்
அளவற்ற பேச்சு
பொய்யைப் பெருக்கும்.

அளவான சாப்பாடு
உடல் நலம் காக்கும்
அளவற்ற சாப்பாடு
ஆயுளைக் குறைக்கும்.

அளவான படிப்பு
மூளையில் கலக்கும்
அளவற்ற படிப்பு
மூளையைக் கலக்கும்.

அளவான செய்கை
நட்பைக் காக்கும்
அளவற்ற நெருக்கம்
அன்பை முறிக்கும்.