Sunday, September 12, 2010

விழியோரம்....!

எனதுயிரே இன்பத்

தேன் மலரே !

வடிவழகே வண்ணக்

கவித் தமிழே !

குளிர்வீசும் பெருங்

கடல் அலையே !

ஒளிவீசும் அருஞ்

சுடர் ஒளியே !

அரும்புமீசை உன்

எழில் சொல்லுதே !

அழகுமுகம் உந்தன்

கதை சொல்லுதே !

உன்மொழியால் தினம்

அமுதூட்ட வா !

உன்னிசையால் எனைக்

களிப்பூட்ட வா !

விரல்பூக்களால் எந்தன்

உடல்மீட்ட வா !

விழிப்பாக்களால் இன்பக்

கவிபாடி வா !

கண்ணிமைமூடினால் உந்தன்

நினைவெங்கும் மலர்கிறதே !

விழியோரம் துளிநீர்

கொஞ்சம் வழிந்தோடுதே !!!

No comments:

Post a Comment