Sunday, September 12, 2010

செல்லமே...செல்லம்...!

எண்ணி லடங்காவிண் மீன்களுடன்
ஏற்றமிகு வட்டநிலா வினில்வந்து
காந்தக் கண்களால் மயக்கிக்
காதோர லோலாக்கில் தாலாட்டினாளே !

செந்தாமரை விழிகளால் அம்பிட்டு
செவ்விதழ் ஆரங்களால் முத்தமிட்டு
மாம்பழக் கண்களால் இசையிட்டு
மாதுளை முத்துக்களால் கவிபாடினாளே !

தேவதையாக என்முன் நின்று
தேனாக இன்பம் அளித்தாளே !
நறுமணங் கமழும் சொற்களால்
நல்லுள்ளந் தந்து சென்றாளே !

தோளோடு தோள் சாய
தொடர்ந் தழைத்துச் சென்று
செல்லமேச் செல்லமவள் மேனியுடன்
எனைச் சேர்த்த ணைத்திட்டாளே !

ஐயோ ! வந்தவள் வேறு யாருமல்ல
வலைவீசி மயக்க வந்தவள் தூக்கமே !
அன்பே ! வந்தணைத்திட்டவள் வேறு யாருமல்ல !
இன்பத் தூக்கத்தில் வந்த கனவே !!!

No comments:

Post a Comment