Sunday, September 12, 2010

காவியம்!

என்னவளே!

நீ
அடுப்படியை
வளையவரும்
அடிமையல்ல!
இனிமையான
சொற்களால்
கொஞ்சிப்பேசும் தேவதை!

நீ
குடும்பப்பாரத்தை
சுமக்கும்
சுமைதாங்கியல்ல!
பௌர்ணமியாய் வளர்ந்து
ஒளிவெள்ளமாய்
ஒளிரும் ஜோதி!

நீ
ஒன்றும் தெரியாத
கிணற்றுத்
தவளையல்ல!
அனைத்தும் அறிந்த
ஆண்டவனின்
அருந்தவப் புதல்வி!

நீ
தண்ணீரில்
வரையப்பட்ட
ஓவியமல்ல!
என்
இதயத்துள்
வடிக்கப்பட்ட
அழியாத காவியம்!!

No comments:

Post a Comment