Saturday, November 27, 2010

என் ஆசை மாமன் மகளே!

என் ஆசை மாமன் மகளே!

குழவிவயதில்

பஞ்சுமிட்டாய் கேட்டு

என்மனதில் பசுமையாய் நின்றவளே!

சிறுவயதில்

சில்க்குச்சட்டைக் கேட்டு

என்சிந்தையில் பூக்களாய்ப் பூத்தவளே!

பள்ளிவயதில்

பாடப்புத்தகம் கேட்டு

என்உள்ளத்தில் குடி கொண்டவளே!

சமைஞ்சவயதில்

சாமந்திப்பூக் கேட்டு

என்நெஞ்சத்தில் நீங்காஇடம் பெற்றவளே!

கல்லூரிவயதில்

கைபேசியைக் கேட்டு

என்கண்களில் தஞ்சம் புகுந்தவளே!

கல்யாணவயதில்

உன்காதலனைக் கேட்டு

என்இதயத்தை நொறுக்கிவிட்டாயடி செல்லமே!

No comments:

Post a Comment