Saturday, November 27, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

1. புதுமலர் தூவி புன்னகை ஏந்தி

வரவேற்கிறேன் இத்திருநாளை !

2. புகழ்மாலை சூடி பாமாலை பாடி

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

3 ஒளிவீசும் கதிரவனில் கலையுடன் திகழவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

4 அழகிய சந்திரனில் களிப்பாய் மகிழவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

5. பொழிந்திடும் மழைதனில் இனிமையை உணரவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

6. தித்திக்கும் பழமதில் தேனாய் சுவைக்கவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

7. எழிலான வசந்தமதில் ஏகாந்தமாய் இருக்கவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

8. பாடிடும் பறவைகளில் கீதமாய் இசைத்திடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

9. சீறிடும் புயலதில் சாந்தமாய் இருந்திடவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

10. பொங்கிடும் கடலதில் முத்தாய் விளையவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

11. பூத்திடும் பூக்களில் மகரந்தமாய் கமழவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

12. ஆடிடும் மயிலதில் வண்ணத்தோகையாய் மிளிரவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

13. கூவிடும் குயிலதில் இராகமாய் ஒலித்திடவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

14. தென்மேற்குக் காற்றில் தென்றலாய் வீசிடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

15. கொட்டிடும் அருவிதனில் பாய்ந்தோடும் ஆறாகவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

16. காமதேனுப் பசுவதனில் அமுதமாய் சுரந்திடவே

வரவேற்கிறேன் இத்திருநாளை !

17. கொஞ்சிடும் கிளிகளதில் கொச்சைப் பேச்சாகிடவே

வரவேற்கிறேன் இப்பொன்னாளை !

18. படமெடுத்தாடிடும் நாகமதில் மாணிக்கமாய் மின்னிடவே

வரவேற்கிறேன் இந்நன்னாளை !

No comments:

Post a Comment