தீப ஒளியில்……!
தீபாவளி வருகிறதே பட்டாசுமழை பொழிகிறதே
வெடிவெடிக்கும்நேரம் உளம்மகிழுமே ஆசைபெருகுமே இனிதாகவே !
[தீபாவளி]
இரயில்வெடியில் சரவெடியில் சிறுஇதயம் கதிகலங்கும்
சாட்டையெடுத்து மெர்க்குரியில்வைத்து விடியும்வரை ஒளியூட்டும் ! [இரயில்]
உலகமுழுவதும் மகிழ்ச்சிவெள்ளம் பார்க்கும்பொழுதிலே அடையுமின்பம்!
சங்குசக்கரத்திலே பூந்தொட்டியும் பூத்து ஒளிரும் ! [தீபாவளி]
அணுகுண்டுகள் வெடிக்கிறதே செவியறைகள் நடுங்கினவோ
புஸ்வானமும் ஆகியதால் வருந்திடுமோ அதுசுகமோ! [அணுகுண்டுகள்]
கம்பிமத்தாப்பினிலே ஒளிவெள்ளங்கள் தெரிகின்றதே வர்ணஜாலங்கள் !
தீப ஒளியில் மலர்வதுயார் மழலைமணிகள் ! [தீபாவளி]
No comments:
Post a Comment