விழியாத் தூக்கம்!
தங்கமே!
நான் நினைத்த பொழுதெல்லாம்
மனம் கோணாமல்
திகட்டத் திகட்ட
இன்பம் கொடுத்தாயே!
நம் மழலைகளுக்குப் பருவத்திலே
அன்பு குறையாமல்
தாயன்பு என்றும்
கிடைக்கச் செய்தாயே!
என் தாய் தந்தையருக்கு
இயன்ற வரை
வேண்டிய பணிவிடைகள்
செய்து மகிழ்வித்தாயே!
என் அருகே விழித்திருந்து
சிரிக்கச் சிரிக்கப்
பேசி என்னைத்
தூங்க வைப்பாயே !
இன்று எங்களைத் தவிக்கவிட்டு
நீமட்டும் விழியாத்தூக்கம்
No comments:
Post a Comment