அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
தலைவாசலில் காப்புக் கட்டிட இருபுறமும் செங்கரும்பு நிறுத்திட
பசுஞ்சாணந்தெளித்துக் கோலம் வரைந்திட ஊரெங்கும் மகிழ்ச்சிவெள்ளம் பெருகிட
தைத் திங்களை வரவேற்கிறேன்! தமிழ்ப் புத்தாண்டினைக் கொண்டாடுகிறேன்!
லலலா லலல லல லலலா
தேனைப் போல் இனிக்கும் செங்கரும்பு அதன் அடியும்
சிறு மழலைகள் இதழில் அறு சுவைதந்து மகிழும்[தேனைப்]
ஹா ஹா ஹா ஹா
பச்சரிசியும் புதுவெல்லமும் கலந்திடப் பொங்கிடும் மணப் பொங்கல்!
முந்திரியும் பசுநெய்யும் கலந்திட வாசனைதந்திடும் தைப் பொங்கல்!
புதுமண் பானையில் வைத்திடும் பொங்கல்
தித்திக்கும் பொங்கல் சர்க்கரைப் பொங்கல்
திருநாளன்றோ என்றும் பொன்னாளன்றோ!
[தலைவாசலில்]
தேங்காய் ரெண்டு உடைத்து வாழைப்பழம் தட்டில் படைத்து
வெற்றிலைபாக்கும் கொஞ்சம் வைத்து பூ மஞ்சள்கட்டி வணங்கிட[தேங்காய்]
ஹா ஹா ஹா ஹா
கதிரவன் உதிக்கையில் வண்ணக் கோலத்தில் வைத்திடும் பொங்கல்!
புதுவழியது தோன்றிடும் நல்வழியது காட்டிடும் வாழ்க்கையில் என்றும்!
மங்கையர் குலவையில் ஒலித்திடும் ஓசையில்
பொங்கிடும் பொங்கல் பொங்கலோப் பொங்கல்
மணப்பொங்கலே!தைப்பொங்கலே!
[தலைவாசலில்]
Friday, January 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment