Friday, January 14, 2011

வெட்கம்...!

வெட்கம்...!

எதற்கெடுத்தாலும்
மாமியாரை
வசைபாடும்
மருமகளாக
இருக்கிறாளே
உன்
மகனிடம்
சொல்லி
வைப்பதுதானே
என்ற
பக்கத்து வீட்டு
பர்வதத்துக்கு
மாதத்தில்
இரண்டேநாள்
வெளியூரிலிருந்து
வரும்
என்மகன்
வரவால்
சந்தோஷமாக
இருக்கும்
அவர்களின் காதல்
என்னால்
தடைபட்டு
விடக்கூடாதே
என்ற அக்கறையில்தான்
எனக்கூறிய
மாமியாரின்
பதிலில்
கதவோரம்
மறைந்திருந்து கேட்ட
மருமகளிடம்
தோன்றியது
நாணத்துடன் கூடிய வெட்கம்.....!!

No comments:

Post a Comment