நண்பா!
தனிமை கண்டு வருந்தாதே!
தனிமையில்தான் பல எண்ணங்கள்
தோன்றி உள்ளத்தைப் புனிதமாக்குகின்றன!
தனிமை கண்டு துவளாதே!
தனிமையில்தான் பல சரித்திரங்கள்
தோன்றி உலகிற்கு மெருகூட்டுகின்றன!
தனிமை கண்டு கலங்காதே!
தனிமையில்தான் பல சிந்தனைகள்
தோன்றி தெளிவு பெறுகின்றன!
தனிமை கண்டு தயங்காதே!
தனிமையில்தான் பல உணர்வுகள்
தோன்றி மனிதனை ஞானியாக்குகின்றன.
Friday, December 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment