Friday, December 4, 2009

உலகம் வயப்பட வெகுதூரம் இல்லை!

காகிதத்தில் பெயர் பொறிக்கவும்
சமுதாயத்தில் பொருள் சேமிக்கவும்
மழலைகள் முன் பெருமை சேர்க்கவும்
ஏட்டுப் படிப்பு தேவைதான்!

வெளிநாட்டு மக்களை அறிவதற்கும்
நண்பர்களுடன் உரையாடுவதற்கும்
பெற்றோரை மகிழ்விப்பதற்கும்
ஏட்டுப் படிப்பு தேவைதான்!!

ஆனாலும் நண்பனே!

தனக்கென வருபவளின்
உள்ளத்தைக் கொள்ளை கொள்வதற்கும்
மழலைகளின் மகிழ்ச்சிதனில்
பங்கு பெறுவதற்கும்
பெற்றோரின் பெருமைகளை
பறைசாற்றுவதற்கும்
அனுபவப் பாடம் எனும்
வாழ்க்கைக்கல்வி தேவையே!
அது சொல்லி வருவதில்லை!
மீன் குஞ்சுக்கு நீந்தக்
கற்றுக் கொடுக்க வேண்டுமோ?

ஆனாலும் நண்பனே!

எதனை நீ நாடுகிறாயோ?
அது உன்னை விட்டு விலகிச் செல்லும்!

எதனை நீ தேடுகிறாயோ?
அது உன்னைவிட்டு ஓடிச் செல்லும்!

எதனை நீ அடைய நினைக்கிறாயோ?
அது உன்னை விட்டு அதிகதூரம் செல்லும்!

நீ விரும்பியதைவிட்டு
கிடைத்ததை ஏற்றுக் கொண்டால்
உலகம் உன் வயப்படும்!அதுவே
உன் வாழ்வில் ஒளியேற்றும்!!

No comments:

Post a Comment